சிறந்த டி20 அணியாக வலம் வந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. சௌத்தாம்டனில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும், டி20 தொடரையும் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்திய அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி டி20 போட்டிகளில் சிறந்த அணிகளுக்கான தவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்ததன் மூலம் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு சறுக்கியது.On top of the world! pic.twitter.com/cYxZPGnKTj— England Cricket (@englandcricket) July 11, 2026கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய அணி டி20 போட்டிகளுக்கான சிறந்த அணிக்கான தவரிசையில் முதலிடம் பிடித்தது. அதன் பின், 1600 நாள்களுக்கும் மேலாக இந்திய அணி முதலிடத்தில் நீடித்தது. இந்திய அணியின் இந்த ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு முன்பாக, டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இங்கிலாந்து அணியின் இலக்காக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.England has risen to the top of the rankings, putting an end to the dominance of the Indian team, which had been the leading T20 side.இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்