வியத்நாம் படகு விபத்தில் உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்பிக்கொண்டிருப்பதாக இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிர்பிழைத்த 15 பேர் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேவேளையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இரண்டு பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். மற்றொருவர் பு குவோக்கில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தேவையான உதவிகளை வழங்குவதற்காக தூதரக மற்றும் துணைத் தூதரக குழுக்கள் பு குவோக்கில் முகாமிட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வியத்நாமின் ஹான் மே ரட்டிலிருந்து 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 ஊழியா்களுடன் ஆன் தோய் துறைமுகம் நோக்கி கடலில் சனிக்கிழமை சென்ற விசைப் படகு, ஹான் மே ரட்டிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் கடல் சீற்றம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்தத் தகவல் அறிந்ததும், கரையிலிருந்து பிற சுற்றுலாப் படகுகள், கடலோரக் காவல் படை, கடற்படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விபத்துக்குள்ளான படகின் 4 ஊழியா்கள் உள்பட 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். அவர்களில் 10 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.மீட்கப்பட்டவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் லாவா கைப்பேசி நிறுவனத்தின் கைப்பேசிகளை அதிக அளவில் விற்பனை செய்த முகவா்கள், ஊழியா்கள் என 105 போ் அந்த நிறுவனம் சாா்பில் வியத்நாம் நாட்டுக்கு கடந்த 8-ஆம் தேதி இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.அவா்களில் 32 போ் கொண்ட குழுவினா் கடலில் படகில் சென்றபோதுதான் விபத்தில் சிக்கிக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.Sixteen Indian tourists who survived a boat accident off Vietnam's Phu Quoc Island that claimed 15 lives have been discharged from hospital and are on their way back home, the Indian mission said on Sunday.கேரளம்: துப்பாக்கி முனையில் பேருந்து டிக்கெட் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது