இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை படைத்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 115 ரன்கள் முன்னிலை பெற்றது.115 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து அணியைக் காட்டிலும் இந்திய அணி 269 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை!லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சோஃபி எக்கல்ஸ்டோன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.இதன் மூலம், இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது அவர் இந்த சாதனையைப் படைத்தார்.No.1 on the list An incredible talent. pic.twitter.com/2NiPNv3vgQ— England Cricket (@englandcricket) July 10, 2026இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து சோஃபி எக்கல்ஸ்டோன் 339 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முன்னதாக, 335 விக்கெட்டுகளுடன் கேத்தரின் ஷிவர் பிரண்ட் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.Sophie Ecclestone has set a record for taking the most wickets for the England team.ஆதிக்கம் முடிந்தது! ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!