பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் பிறந்த நாளுக்காக ஜெயிலர் 2 படக்குழுவினர் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ஷிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் ஷிவ ராஜ்குமார் நடித்த காட்சிகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியினால் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், நெல்சன் பாராட்டும் விடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. Wishing the charismatic actor, Karunada Chakravarthy @NimmaShivanna a very happy birthday!#HBDShivaRajkumar #HappyBirthdayShivaRajkumar pic.twitter.com/qxgCNDskK6— Sun Pictures (@sunpictures) July 12, 2026