தான் பாடிய பாடல்களிலேயே பாடுவதற்குக் கடினமாக அமைந்த பாடலை ஜானகி கூறியிருந்தார். இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்த எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஆயிரக்கணக்கான மிகச்சிறந்த பாடல்களைப் பாடிய குரல் என்பதால் பலரும் ஜானகியின் பாடலைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.70 ஆண்டுகளுக்கு மேல் திரையிசைப் பாடல்கள் மற்றும் ஆன்மிகப் பாடல்களைப் பாடிய ஜானகிக்கு கடினமாக அமைந்த பாடல் ஒன்றுண்டு. அது, 1977 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஹேமாவதி திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘சிவ சிவ என்னட நாளிகே ஈகே..” பாடல்தான். அபோகி மற்றும் தோடி ராகங்களில் இருந்ததால் அதனைப் பாட மிகவும் கடினமாக இருந்ததாக ஜானகியே ஒருமுறை கூறியிருந்தார். இறுதியாக, 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் (pathu kalpanakal) திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘அம்மபூவினும்’ (ammapoovinum) பாடலைப் பாடியதுடன் ஜானகி ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது. This is the song that was difficult for singer Janaki to sing!