லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்து வீராங்கனை!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தைக் காட்டிலும் 269 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.Saying goodbye to another legend of our game pic.twitter.com/pVoNiRCkCo— England Cricket (@englandcricket) July 11, 2026இந்த நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.அண்மையில் இங்கிலாந்து வீராங்கனை டம்மி பீமௌண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது அந்த வரிசையில் ஹீதர் நைட்டும் இணைந்துள்ளார்.இங்கிலாந்து அணிக்காக இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹீதர் நைட் 976 ரன்களும், 159 ஒருநாள் போட்டிகளில் 4372 ரன்களும், 145 டி20 போட்டிகளில் 2656 ரன்களும் எடுத்துள்ளார்.England player Heather Knight is retiring from international cricket with the ongoing Test match against India at Lord's.இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சோஃபி எக்கல்ஸ்டோன் சாதனை!