7 ஆண்டுகளுக்குப் பிறகு... தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்த இந்திய அணி!

Wait 5 sec.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (ஜூலை 9) பிரிஸ்டாலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது டி20 தொடரை இழந்துள்ளது.முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து டி20 தொடர்களை இந்திய அணி இழந்திருந்தது.இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 11) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.After seven years, the Indian team has lost two consecutive T20 series.சூர்யவன்ஷிக்காக சஞ்சு சாம்சனை நீக்கியது சரியா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?