பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை வெளியிடவுள்ளபுதிய அறிவிப்பு என்ன?

Wait 5 sec.

பொள்ளாச்சியில் இன்று(ஜூலை 12) மாலை நடைபெறவுள்ள மாநாட்டில் அண்ணாமலை வெளியிடப்போகும் புதிய அறிவிப்பு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள அமைப்பு சார்பில் முதல் மாநாடு பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.இதில், சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அந்த அமைப்பு சார்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ‘போதையில்லாத பொள்ளாச்சி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆச்சிபட்டி அருகே 15 ஏக்கர் நிலம் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டுக்கு வருவோருக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவக் குழுவினர் மற்றும் வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், பொள்ளாச்சி மாநாட்டில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலையின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வி த லீடர்ஸ் அமைப்பின் 2வது மாநாடு திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.Information has emerged regarding the new announcement Annamalai is set to make at the conference taking place in Pollachi this evening (July 12).ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!