மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

Wait 5 sec.

மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார்.கர்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த ஜானகியின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்த பின்னர், மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் ஜானகியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.மறைந்த ஜானகி உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கை நடத்த கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாடகி ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!Members of the public are paying their respects to Janaki's mortal remains, which have been placed at the Mysuru Maharaja College grounds.