கூடுதல் நேரத்தில் 2 கோல்கள்: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் ஆர்ஜென்டீனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆர்ஜென்டீனா ஜூலை 16ஆம் நாள் மோதவிருக்கின்றன. இந்திய நேரப்படி அந்தப் போட்டி புதன்கிழமை இரவு 12.30 மணிக்கு நடைபெறும். அமெரிக்காவில் கான்சாஸ் சிட்டி திடலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா - ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 10ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கில் மெக் அலிஸ்டர் தனது தலையால் கோல் அடித்தார். பின்னர், இரண்டாம் பாதியில் ஸ்விட்சர்லாந்தின் டான் டோயே 67ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் 112ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவரது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், 120+1ஆவது நிமிஷத்தில் லொடாரோ மார்டினெஸ் மற்றுமொரு கோல் அடித்து 3-1 என ஆர்ஜென்டீனா வெற்றி பெற உதவினார்கள். ஒரு கட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணி ஆர்ஜென்டீனாவை விட அதிகமாக பந்தை தன்வசம் வைத்திருந்தார்கள். பின்னர், கடைசி நேரத்தில் ஆர்ஜென்டீன அணியினர் தங்கள்வசம் அதிகமாக வைத்து ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். ஒரு கோல்கூட அடிக்காமல் ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்..! எப்படி? Two goals in extra time: Argentina advances to the semi-finals!