மணிப்பூரில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நெல் வயலில் சனிக்கிழமை மாலை வேலை செய்துகொண்டிருந்த 53 வயதுடைய நபர் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குகி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் இம்மாவட்டத்தின் கோவாஜாங் கிராமத்தைச் சேர்ந்த ஹாவ்லால் சிங்சித் சம்பவ இடத்திலேயே பலியானார். அதேவேளையில், அவருடன் இருந்த அவரது மனைவி நெம்நெய்கிம் சிங்சித் காயமின்றி தப்பினார். சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் 20 முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றினர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா். மாநிலத்தில் இன்னும் முழுமையான அமைதி நிலைநாட்டப்படாத சூழலில், குகி-நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.A 53-year-old man was shot dead by some armed men while he was working in a paddy field in Manipur's Kangpokpi district on Saturday evening, officials said.வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம்: விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது