தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 9, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. தொடர்ந்து 4 ஆவது நாளாக தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120, செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது. நேற்று (புதன்) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மேலும் ரூ. 640 குறைந்தது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 9, வியாழன்) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாகக் கூறியுள்ள நிலையில், உலகளவில் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. chennai gold and silver price today july 9