ரயிலின் ஏசி பெட்டியில் முதலிரவு அலங்காரம் செய்யப்பட்டது வைரலான நிலையில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதி நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி கூபே பெட்டியை ஜூலை 6 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இணையம் மூலம் ரஹத் எனும் அலங்கார நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, அவர்கள் முன்பதிவு செய்த பெட்டியை முதலிரவு கொண்டாடுவதைப் போன்ற அலங்காரம் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். ஜால்னா ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதாக இருந்தது. இந்த நிலையில், அந்தப் பெட்டியை அலங்காரம் செய்ததை சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது வைரலானது. இதுதொடர்பாக அந்நிறுவன உரிமையாளர் அசார் ஷேக் பேசுகையில், ”ஜால்னாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்காக அந்தப் பெட்டி முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஔரங்காபாத்திலிருந்து ஜால்னா ரயில் நிலையத்திற்கு காரில் வந்தனர். அதற்கு முன்னர் எங்கள் குழுவினர் ரயில் பெட்டியை அலங்கரித்தனர்” என்று தெரிவித்திருந்தார்.ரயில் பெட்டிகளை பயணிகளுக்கு அலங்கரிக்க அனுமதியளித்தது யார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தனியார் நிறுவன ஆட்களை ரயிலில் ஏற அனுமதித்திருக்கக் கூடாது என மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜால்னா ரயில் நிலைய டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்படதாகவும், அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தென் மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீதர் தெரிவித்தார். அதேபோல, அந்நிறுவன உரிமையாளருக்கு ரயில்வே பாதுகாப்புப் படை சம்மன் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'Wedding night' decoration in train's AC coach: Ticket examiner suspended!ஏசி ரயில் பெட்டியில் முதலிரவா? வைரல் விடியோவால் வெடித்த சர்ச்சை!