மேற்கு ஆசியாவில் வணிகக் கப்பல்கள் மீது குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இந்தியா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், “சர்வதேச நீர்வழிப் பாதைகள் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து இந்தியா மிகவும் வருத்தமடைந்துள்ளது.இதுபோன்ற தாக்குதல்களால் அந்தப் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைபிடிக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும், மொதுமக்களின் பாதுகாப்பு, தடையில்லாத எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக உறவை உறுதி செய்யுமாறு இந்தியா அழைப்பு விடுக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி இப்பிரச்னையில் அமைதி மற்றும் நிரந்தரத் தீர்வை எட்டவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். Renewed war tensions in West Asia: India issues statement expressing concernஈரான் போரில் ஒத்துழைக்காத ஸ்பெயினுடன் வா்த்தகம் நிறுத்தம்: டிரம்ப்