டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 12 மணிக்கு உள்ளாகவும், இரவு 10 மணிக்கும் மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 15-20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனையை கட்டுப்படுத்தியிருக்கிறோம். பாட்டிலுக்கு ரூ. 10 வாங்கியவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பாட்டிலுக்கு ரூ.10 பிரச்சினைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும். மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. கொண்டு வரப்படும். எஃப்எல்- 3 பார்களில் 21 வயதுக்குள்பட்டவர்களை அனுமதித்தால், பாரின் அனுமதி ரத்து செய்யப்படும். அதையும் நெறிமுறைபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். Minister Vignesh stated that the Chief Minister has ordered a 25% salary hike for TASMAC employees.