தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!

Wait 5 sec.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக குலாம் அகமது மிர் இன்று (ஜூலை 8) நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் குலாம் அகமது மிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திற்கு பிரகாஷ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இரு மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக வேணுகோபால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?Tamil Nadu Congress High Command In-charge Ghulam Ahmed