வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

Wait 5 sec.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வீடு ஒன்றில் எதிர்பாராத வகையில் வித்தியாசமாக வெள்ள நீர் புகுந்துள்ளது. வாசல் வழியாக வெள்ள நீர் சூழ்ந்து காணப்படும் நிலை மாறி, வீடுகளில் உள்ள ஸ்விட்ச், மின்சார இணைப்புகள் வழியாக வீட்டிற்குள் மழை நீர் வழிந்தோடுகிறது. வீட்டு மொட்டை மாடியில் பெய்யும் மழை நீர், கட்டுமானப் பற்றாகுறை காரணமாக மின்சார இணைப்புகளில் வழிந்து வீடுகளுக்குள் நுழைகிறது. அதுவும் ஸ்விட்ச் பிளக்கிற்குள் இருந்து அருவிபோல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனை அந்த வீட்டின் பெண் ஒருவர் விடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. முறையாக வடிகால் வசதி இல்லாததால், நீர் வழிந்து செல்ல வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மும்பை குடியிருப்பு மக்கள் வெள்ள நீரில் கதவைக்கொண்டு படகு சவாரி செய்தும், நீரை வாரி இரைத்தும் விளையாடும் விடியோ நேற்று சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டது. அடிப்படை வசதிகளையும், முறையான வடிகால் அமைப்புகளையும் மாநகராட்சி நிர்வாகம் அமைக்காததன் காரணமாக மக்கள் இன்னல்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் சுகாதார சீர்கேடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், சாலையில் தேங்கிய மழை நீரில் மக்கள் குளித்து விளையாடுவதில் மும்பை நகருக்கு எந்த பெருமையும் இல்லை என அந்த விடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி! காரணம் என்ன?Mumbai flood Flood waters entered homes in an unusual manner