நடிகர் மாதவன் நடித்துள்ள “ஜிடிஎன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து வெளியான “ராக்கெட்ரி” படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து, புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.இந்த நிலையில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள “ஜிடிஎன்” படத்தின் ”தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்” எனும் முதல் பாடல் இன்று (ஜூலை 8) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.விமர்சனங்களால் பாதிப்பில்லை? ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா!The first song from the movie "GDN," starring actor Madhavan, has been released.