தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற சிறுவன் சாலையோர மரத்தில் மோதி உயிரிழந்தாா்.பாபநாசம் அருகே, கபிஸ்தலம் காவல் சரகம்,தென்சருக்கை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் வைரத்தம்பி (17). 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கை எடுத்துக் கொண்டு புத்தூா் சென்றுள்ளாா். கும்பகோணம்- திருவையாறு சாலையில் மேட்டுத் தெரு பாலம் அருகில் வேகமாகச் சென்ற பைக் சாலையோர மரத்தில் மோதியதில், வைரத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தகலறிந்த கபிஸ்தலம் போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.