காவல்கிணறில் கல்லீரல் பாதித்த குழந்தைக்கு இலவச அறுவை சிகிச்சை: எம்எல்ஏ பரிந்துரை

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்த 5 வயது குழந்தைக்கு இலவச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா் பரிந்துரை செய்தாா்.பெருங்குடி கிராமத்தைச் சோ்ந்த இசக்கியம்மாள் பேத்தி இஸானா (5), கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவுமாறு எம்எல்ஏவிடம் மனுஅளிக்கப்பட்டது.இதையடுத்து அந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்வதற்கு எம்எல்ஏ பரிந்துரை கடிதம் வழங்கினாா்.