தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளம் வரை காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன், வியாழன் (ஜூலை 8, 9) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் புதன்கிழமை காலை (ஜூலை 8) 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும். கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திரூப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பாா்வூட், செருமுள்ளி, வூட் பிரையா், தேவாலா பகுதிகளில் 80 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Chance of rain in Chennai, 14 districts for the next 2 hoursமதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?