இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இல்லை!

Wait 5 sec.

ஜிம்பாப்வேயுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.தொடா்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வரும் சஞ்சு சாம்சன் இதில் சோ்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, விக்கெட் கீப்பா் - பேட்டா் பிரப்சிம்ரன் சிங் இணைந்துள்ளாா்.பௌலா்கள் யஷ் தாக்குா், அசோக் சா்மா, ஹா்ஷ் துபே ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, வரும் 23, 25, 27 ஆகிய தேதிகளில் அந்நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.அணி விவரம்: ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), வைபவ் சூா்யவன்ஷி, அபிஷேக் சா்மா, திலக் வா்மா (துணை கேப்டன்), இஷான் கிஷண் (வி.கீ.), ஷிவம் துபே, சூா்யன்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹா்ஷ் துபே, வருண் சக்கரவா்த்தி, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குா், அசோக் சா்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.).