இங்கிலாந்து தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் திடீரென கழட்டிவிட்டப்பட்டதற்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவரும் சோபிக்கவில்லை.இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என்றும், டி20 உலகக் கோப்பையில் நாயகனாக ஜொலித்த மூத்த வீரர் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் என்ன என்பது குறித்து ரசிகர்களும் மூத்த வீரர்களும் கேள்வியெழுப்பியிருந்தனர். குறிப்பாக மூன்றாவது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி மிகவும் மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்தது. இதனால், இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இந்த நிலையில், இங்கிலாந்து தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதற்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.இதுதொடர்பாக கௌதம் கம்பீர் பேசுகையில், “சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து என்னுடைய தரப்பில் இருந்து தெளிவுபடுத்திவிட்டேன். எனக்கும் (கம்பீர்) சஞ்சு சாம்சனுக்கும் இடையேயான உரையாடல் இது. இந்த உரையாடல்கள் வெளியே வராது. சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை, அவர் இந்தியாவுக்காக ஆற்றிய பங்களிப்புகள் அதிகமானவை என நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சில நேரங்களில் வீரரின் ஆட்டத்திறன் குறித்தும் பார்க்க வேண்டும். இந்தத் தொடரில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்ப எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. சர்வதேச கிரிக்கெட் என்பது முடிவுகளுடன் தொடர்புடையது. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு சிறந்த பிளேயிங் லெவனை இறக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு வீரரும் தங்கள் இடத்துக்காவும் இந்திய அணிக்காகவும் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.சூழ்நிலைக்கேற்ப நாங்கள் சிறப்பாகஎங்கள் அணியை மாற்றிக்கொள்ளவில்லை. அது அயர்லாந்தாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, இதுதான் யதார்த்தமான உண்மை. நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டிருந்தாலோ அல்லது இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தாலோ, ஒருவேளை தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோற்றிருக்க மாட்டோம்” என்றார்.Gautam Gambhir has insisted Sanju Samson remains in India's T20I plans despite his surprise omission against England. The India coach said selection is based on form and results, while leaving the door open for the World Cup hero to make a comeback.