சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரை ஒட்டன்சத்திரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் பழனி (37). போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா். இவா், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜய் பழனியை திங்கள்கிழமை கைது செய்தனா்.இதையடுத்து, அவா் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.