வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்பு; பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

Wait 5 sec.

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அந்த மாநில அமைச்சர் ஏ.பி. அனில்குமார் தெரிவித்தார்.வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா். உயிரிழந்த 3 பேரும் மத்திய பிரதேசம், பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது.இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி 5 போ் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தீயணைப்புப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மோப்ப நாய்களின் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதிக்கு கீழே உள்ள ஆற்றுப் பகுதியிலும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முன்னதாக, நிலச்சரிவில் 3 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின்கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருப்பதாக வயநாடு காவல் துறைக் கண்காணிப்பாளா் தேவமனோகரன் தெரிவித்தாா்.இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் தேடுதல் பணி நடைபெற்று வரும் பகுதியின் 'மண்டலம் 1'-லிருந்து வியாழக்கிழமை காலை மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாகவும், இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி காணாமல் நான்கு போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் ஏ.பி. அனில்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.இந்த பகுதியின் மண்டலம் 1 மற்றும் 2-ல் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆற்றின் அருகிலும் தேடுதல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 10 பேரில், மூவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்; நால்வர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது; மற்ற மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர், அவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். one more body was recovered from the Wayanad landslide site bringing the total number of persons killed in the disaster to four...ரயிலின் ஏசி பெட்டியில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்!