தனுஷின் ஓம் திரைப்படத்தில் இணைந்த நஸ்ருதின் ஷா!

Wait 5 sec.

நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்தில் நஸ்ருதின் ஷா இணைந்துள்ளார். நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவு நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளதை போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர். நஸ்ருதீன் ஷா தமிழில் ஹே ராம் திரைப்படத்தில் மகாத்மா காந்தியாக நடித்திருந்தார். தற்போது, நீண்ட காலம் கழித்து தனுஷ் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க உள்ளார். Naseeruddin Shah has joined the cast of actor Dhanush's film Om. பணிந்தவரை விட்டு வைப்பான் பகைத்தவரை நட்டு வைப்பான்: தனுஷ்