நடிகர் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் நடிப்பில் ஓணம் வெளியீடாக ஐயம் கேம் திரைப்படம் வெளியாகிறது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.அதே நேரம், துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில், நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இதன் முதல் தோற்ற போஸ்டரை நாளை (ஜூலை 10) காலை 10.08 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் ஓம் திரைப்படத்தில் இணைந்த நஸ்ருதின் ஷா! An update on actor Dulquer Salmaan's 41st film has been released.