கட்சித் தாவல் புகார்: பேரவைத் தலைவரிடம் முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம்!

Wait 5 sec.

கட்சித் தாவல் புகார் தொடர்பாக ராஜிநாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் பேரவைத் தலைவர் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.இவர்கள் மீது அதிமுக அளித்த புகாரில், தகுதிநீக்கம் தொடர்பாக பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படி, அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்பு ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Defection complaint: Former MLAs offer explanation to the Speakerஇன்று தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)