அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அமைச்சர்கள் மட்டுமின்றி அதிகாரிகள் அனைவருமே இப்போது எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவர்தான் அப்படி செயல்படுகிறார் என்று சொல்ல முடியாது. சமூக ஊடகங்களில் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அது பொது ஒழுங்குக்கு கேடாக இருக்கும் என்றால் சுட்டிக் காட்டுவோம். அமைச்சர்கள் அதை உள்வாங்கிக் கொண்டு, அது தவறு என்றால் அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்ற பிறகு தான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுகவில் சேர்த்தது அதிர்ச்சியாக இருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளியில் சென்று ஆய்வு மேற்கொண்ட விடியோவுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. It has become a habit for ministers to post Reels: Thirumavalavanகுழந்தை பெற்றுக்கொள்வது என்பது...! தாய்மை பற்றி நடிகை பார்வதி கருத்து