ரயில் ஒன் செயலியில் எடுத்த முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை நேரடியாக செல்போனில் காட்டினால் மட்டுமே செல்லும். ஏற்கெனவே, பயன்பாட்டிலிருந்த யுடிஎஸ் செயலிக்கு பதிலாக பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கும் வகையில் ரயில் ஒன் செயலியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது.அதில், முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள், முன்பதிவுள்ள பயணச் சீட்டுகள், நடைமேடை பயணச் சீட்டுகள் என அனைத்து வகை பயணச் சீட்டுகளையும் பெறும் வசதி உள்ளது. அத்துடன் ஐஆர்சிடிசி ரயில் கனக்ட், என்டிஇஎஸ், யுடிஎஸ் ஆன் மொபைல், ரயில் மதாத், ஃபுட் ஆன் டிராக் ஆகிய சேவைகளைப் பெறும் ஒருங்கிணைந்த செயலியாகவும் அது உள்ளது.இந்த நிலையில், ரயில் ஒன் செயலி மூலம் பெறப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை நேரடியாக செல்போனில் காட்டினால் மட்டுமே செல்லும். இதைத் தவிர்த்து, ஸ்கிரீன்ஷாட்கள்,பிடிஎஃப், வாட்ஸ்ஆப் ஃபார்வார்டு செய்திகள்-கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.மேலும், ரயில் புறப்பட்ட பிறகு செய்யப்படும் முன்பதிவுகள் செல்லாதவையாகக் கருதப்படும் என்று இந்திய ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.அண்மையில் அசல் டிஜிட்டல் டிக்கெட்டுக்கு பதிலாக வாட்ஸ்ஆப் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டிய ஒரு பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜியோவின் அடுத்த அதிரடி! ரூ.55ல் டிவி ப்ரோ பேக்! அட்டகாசமான ஆஃபர்!Unreserved tickets booked via the Rail One app are valid only if shown directly on the mobile phone.