நடிகை மமிதா பைஜூ சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். முதல்வர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.மேலும், நடிகர் சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் பத்தேலம் குடும்ப யூனிட் உள்பட 5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு மமிதா காத்துக்கொண்டிருக்கிறார்.இந்த நிலையில், சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக மமிதா தெரிவித்துள்ளார். மேலும், புரமோஷன் சார்ந்த விஷயங்களை மட்டும் அவரது நிர்வாகக் குழு பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி புதிய போஸ்டர்! Actress Mamitha Baiju has temporarily stepped away from social media.