ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நடிகை ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் தொடரான பாரிஜாதம் தொடரில், இவருக்கு ஜோடியாக அக்ஷய் கமல் நடித்து வருகிறார்.மேலும், இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார். தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.ஆல்யா மானசா, பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். மாறுபட்ட கதையில் மானசா நடிப்பதால், இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.பாரிஜாதம் தொடர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இந்த நிலையில், பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.The broadcast time of the Parijatham serial, currently airing on Zee Tamil, has been changed.ஒன்று சேர்ந்த குடும்பம்... 170 நாள்களில் நிறைவடைந்த செல்லமே செல்லமே தொடர்!