நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரவி மோகன் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம்.லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார். மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டதுடன் அடுத்தடுத்த முக்கிய காட்சிகள் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி விட்டு எடுத்து வருவதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் நாயகன் யார்? It is reported that 50 percent of the filming for the movie Benz, starring Raghava Lawrence and Ravi Mohan, has been completed.