ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தற்போது 8 அணிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நாளை (ஜூலை 9) காலிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன. காலிறுதிக்கு முன்னேறியுள்ள அணிகள் பற்றி...ஃபிரான்ஸ் - மொராக்கோஉலகக் கோப்பையில் அனைவரது விருப்பமான அணியான ஃபிரான்ஸ் அதனை மெய்ப்பிக்கும் விதமாக எதிர்பார்ப்பை குரூப் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று, 32 அணிகள் சுற்றில் ஸ்வீடனை எளிதாக வீழ்த்தியது. இறுதியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பராகுவேயை நூலிழையில் வென்றது. கைலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே, பிராட்லி பார்கோலா மற்றும் மைக்கேல் ஒலிஸ் போன்ற அபாரமான திறமைகொண்ட வீரர்கள் இருப்பதால் டிடியர் டெஷாம்ப்ஸ்-ன் (ஃபிரான்ஸ் அணியின் மேலாளர்) அணியை கட்டுப்படுத்துவது சற்றே கடினமான விஷயம். அதேபோல, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கனடாவை வீழ்த்திய மொராக்கோ அணி, அதற்கு முன்னர் பெனால்டி முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத மொராக்கோ அணி, இருமுறை உலக சாம்பியனான ஃபிரான்ஸை எதிர்கொள்வதில் அஞ்சாமல் உள்ளது. 2022 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் ஃபிரான்ஸ் அணியிடம் தோற்று வெளியேறிய மொராக்கோ, இந்த முறை அதற்கு பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்ற முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க அணி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்ற மொராக்கோ இந்த முறையும் அந்த சாதனையைப் படைக்கும் முனைப்பில் உள்ளது. ஃபிரான்ஸ் - மொராக்கோ மோதும் போட்டி ஜூலை 10 அன்று நடைபெறுகிறது. ஸ்பெயின் - பெல்ஜியம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுகலை 1 - 0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இந்தத் தொடர் முழுவதும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாத அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. லூயிஸ் டி லா ஃபியூண்டே-ன் (ஸ்பெயின் அணி மேலாளர்) அணி எப்போதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்தைக் கையாள்வதில் வியக்கத்தக்க செயல்திறனும் தனித்திறமையும் கொண்டவர்கள்.பார்சிலோனா கிளப் அணியின் நட்சத்திர வீரரான லாமின் யமால் இந்தத் தொடரில் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ள நிலையில், மிக்கேல் ஓயர்சபல் நான்கு முறை கோல் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரியாவுக்கு எதிரான 3 - 0 என்ற வெற்றியில் அடித்த 2 கோல்களும் அதில் அடங்கும். பெல்ஜியம் அணி கடைசி போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்காவை 4 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 32 அணிகள் சுற்றில் முதலில் 2 கோல்கள் பின் தங்கிய நிலையில், கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கணக்கில் செனகலை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் கால்பந்து அணியின் ‘பொற்கால தலைமுறை’ என்று அழைக்கப்படும் கெவின் டி ப்ரூய்ன் மற்றும் ரொமேலு லுகாகு உள்ளிட்ட வீரர்களுக்கு, அநேகமாக இதுவே கடைசி உலகக் கோப்பை விழாவாக இருக்கும். எனவே, அவர்கள் வெற்றியுடன் விடைபெறவே விரும்புவார்கள்.ஸ்பெயின் - பெல்ஜியம் மோதும் போட்டி ஜூலை 11 அன்று நடைபெறுகிறது. நார்வே - இங்கிலாந்துஇங்கிலாந்தின் தடுப்பாட்டம் ஆடும் வீரர்கள் பிரீமியர் லீக் தொடரில் நார்வேயின் நட்சத்திர வீரரான எர்லிங் ஹாலண்டை எதிர்கொண்டு பழக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்களால் ஹாலண்டை சமாளிக்க முடியுமா என்பது தனிக் கதை. தாமஸ் டுச்செல்-ன் (இங்கிலாந்து மேலாளர்) அணி, இரண்டாவது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.கேப்டன் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். மெக்சிகோவிற்கு எதிரான விறுவிறுப்பானப் போட்டியில் 3-2 என்ற கணக்கில் அடித்த மூன்று கோல்கள் உள்பட, அணி மொத்தமாக இத்தொடரில் அடித்த 11 கோல்களில் 10 கோல்களை இருவரும் அடித்துள்ளனர்.10 வீர்ரகளாகக் குறைக்கப்பட்ட அணியுடன் விளையாடி மெக்ஸிகோவை வீழ்த்த கடுமையாகப் போராடிய இங்கிலாந்து, நார்வேயுடன் வெற்றிபெறும் நம்பிக்கையில் உள்ளனர்.ஆனால், அவர்கள் கோல்டன் பூட் விருதை வெல்லும் முனைப்பில் இதுவரை ஏழு கோல்களை அடித்துள்ள, தடுத்து நிறுத்தவே முடியாத ஹாலண்டின் அணியுடம் மோதவுள்ளனர். மான்செஸ்டர் சிட்டி அணி வீரரான ஹாலண்ட், நார்வே தேசிய அணிக்காக விளையாடிய கடைசி 14 போட்டிகளில் மொத்தம் 27 கோல்கள் கோல் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் தடுப்பாட்ட வீரர்களுக்கு இவர் நிச்சயமாக சிக்கல்களைக் கொடுப்பார். நார்வே - இங்கிலாந்து மோதும் போட்டி ஜூலை 12 அன்று நடைபெறுகிறது. ஆர்ஜென்டீனா - சுவிட்சர்லாந்துலயோனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா அணி, இரண்டு பெரிய பெரும் சவால்களிலிருந்து மீண்டு வந்து, சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நடப்புச் சாம்பியனான ஆர்ஜென்டீனா, 32 அணிகள் சுற்றில் உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பங்கேற்ற கேப் வெர்டே அணியுடன் கூடுதல் நேரம் வரை போராடி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியைப் பெற்றது.அதேபோல, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துக்கு எதிரான போட்டியில் 78 நிமிடங்கள் வரை 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்தது ஆர்ஜென்டீனா. தோல்வியின் விளிம்புக்குச் சென்ற அவர்கள் கடைசி 13 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து ஒரு வியக்கத்தக்க வெற்றியை மெஸ்ஸி தலைமையில் பெற்றனர். 4-வது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கும் ஆர்ஜென்டீனா அணி, தொடர்ந்து விதியுடன் விளையாடிக் கொண்டிருக்க முடியாது என்பதை தலைமைப் பயிற்சியாளர் லயனல் ஸ்கலோனி நன்றாக அறிவார். ஆனாலும்கூட அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிரூபித்துள்ளனர். கேன்சஸ் சிட்டியில் நடைபெறும் காலிறுதியில் சுவிட்சர்லாந்தை ஆர்ஜெண்டீனா எதிர்கொள்கிறது. கடைசி போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட்டில் கொலம்பியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.1954-க்குப் பின் 72 ஆண்டுகள் கழித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணி, குழுவாக இணைந்து ஒருங்கிணைவுடன் விளையாடுவதால் அவர்களை வெல்வது ஆர்ஜென்டீனாவுக்கு கடினமாகவே இருக்கும்.ஆர்ஜென்டீனா - சுவிட்சர்லாந்து மோதும் போட்டி ஜூலை 12 அன்று நடைபெறுகிறது. தமிழில் - வ. ஜெகதீஸ் FIFA World Cup: The 8 teams facing off in the quarter-finalsகடைசி 13 நிமிடங்களில் 3 கோல்கள்! அதிரடியாக வென்ற ஆர்ஜென்டீனா!