மேட்டூர் அணை: தேவாலய கோபுரம் தெரிகிறது!

Wait 5 sec.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாகக் குறைந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில், நீரில் மூழ்கியிருந்த கிறிஸ்துவ தேவாலய கோபுரம் வெளியே தெரியத் தொடங்கியது.மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. கிராம மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அங்கு வசித்த மக்கள் ஜலகண்டேஸ்வரர் கோயில் , வீரபத்திரன் கோயில், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட ஆலயங்கள் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்.அணை கட்டப்பட்டபோது, நீர்த்தேக்க பகுதிகளில் வசித்தவர்கள் வேறுபகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர். இதனால் அவர்கள் வழிபாடு செய்து வந்த கோயில்கள் நீரில் மூழ்கின. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடிக்கு கீழே செல்லும்போது, கிறிஸ்தவ தேவாலயமும், 70 அடிக்கு கீழே செல்லும்போது ஜலகண்டேஸ்வரர் கோயிலும் வெளியில் தெரியும். தற்போது அணையின் நீர்மட்டம் 76 அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் மூழ்கியிருந்த 100 அடி உயரம் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம் மேலே தெரியத் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் பரிசல் மூலம் சென்று, கிறிஸ்தவ தேவாலயத்தை புகைப்படம் எடுத்து ரசித்து செல்கின்றனர்.As the water level of Mettur dam has dropped to 76 feet, the submerged Christian church tower in Pannawadi Parisal area has started to emerge.தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!