ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் நாயகன் யார்?

Wait 5 sec.

இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது.இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், இதில் நாயகனாக நடிகர் சூர்யா அல்லது தனுஷ் நடிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், நடிகர் சூர்யா தன் 48-வது திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நடிகர் தனுஷும் ஓம் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதனால், இந்தாண்டு இருவரும் வெவ்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பதால் வேள்பாரி திரைப்படத்தில் வேறு யார் நடிக்கப் போகிறார்? எனக் கேள்விகள் எழுந்துள்ளன. 37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்! No updates have been released regarding the movie Velpari, which is set to be directed by Shankar.