காங்கோவில் எபோலாவுக்கு 580 பேர் பலி! பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

Wait 5 sec.

காங்கோவில் எபோலா பரவலுக்கு இடையே மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ, உகாண்டா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக எபோலா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அந்நாடுகளின் அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. காங்கோ நாட்டில் மட்டும் 580 பேர் எபோலா தொற்றால் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு எபோலாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,708 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், முறையாக ஊதியம் வழங்காதது மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்துக் கொடுக்காததைக் கண்டித்து சூடானில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட கடந்த மே 15 ஆம் தேதி முதல் எபோலா பாதிப்புகள் அதிகம் பதிவாகியுள்ள இடூரி மாகாணத்தில், மருத்துவப் பணியாளர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.ஏற்கெனவே, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் காங்கோவில் உள்ள மருத்துவ மையங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளது அங்கு நிலமையை மேலும் மோசமாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்புthat medical workers in Congo are on strike amidst the Ebola outbreak.