ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்வி

Wait 5 sec.

விசிகவுடன் தவெக கூட்டணி வைத்தது குறித்து விஜய்யிடம் யாருமே கேள்வி எழுப்புவதில்லையே என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.விசிகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா சென்னை அசோக் நகரில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது, "திமுக இன்று 59 இடங்களில் வென்றிருக்கிறது என்றால், அதிலும் விசிகவின் பங்களிப்புதான் மகத்தானது. அவர்களுக்கு அந்தளவுக்கான எண்ணிக்கையைத் தக்கவைத்ததில் விசிகவின் பங்கு மகத்தானது.இதனை யாருமே சொல்ல மாட்டார்கள். ஏனெனில், விசிகவுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஒருவர் என்னை துணை முதல்வர் என்கிறார், ஒருவர் முதல்வர் என்கிறார். ஆனால், நாங்கள் யாரிடமும் இவ்வாறு கோரவில்லை. நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கின்றனர்.நான் மக்களுக்காகவும், அவர்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுகிறேன். இதில் பெரிய கணக்கீடோ தொலைநோக்குத் திட்டமோ எதுவுமே கிடையாது.மக்களாய்ப் பார்த்து, திருமாவளவனுக்கு இந்தத் தகுதி இருக்கிறது என்று தீர்மானிக்கும்வரையில், பிழைப்பதும் பாடுபடுவதும் மட்டுமே எனது வேலை.விசிகவும் திருமாவளவனும் குறிவைக்கப்படுவது, உள்நோக்கம் கொண்ட ஒரு செயல்.ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என்று விஜய்யை விமர்சித்துவிட்டு, பின்னர் ஏன் அவருடன் கூட்டணி வைத்தீர்கள் என என்னிடம் கேள்வி கேட்கின்றனர்.ஆனால், ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் என யாரும் விஜய்யிடம் கேள்வி கேட்பதில்லையே ஏன்?இதைப் பார்த்ததும் விஜய்க்கு எதிராக திருமாவளவன் கருத்து, மு.க. ஸ்டாலினுக்கு எதிராக கருத்து என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்துவர். அவர்கள் குழப்பம் ஏற்படுத்திவிட்டு, திருமாவளவன் குழப்பம் ஏற்படுத்திவிட்டதாகவும் கூறுவர்" என்று தெரிவித்தார்.குதிரைச் சந்தை! அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்குத்தான் அதிக விலை!Thol. Thirumavalavan questions the reason for the TVK - VCK alliance