தங்கம் விலை திடீர் உயர்வு! மாலை நிலவரம்! (ஜூலை 9)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று(ஜூலை 9) காலை குறைந்து விற்பனையான நிலையில், மாலையில் திடீரென உயர்ந்துள்ளது.நிகழ் வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. கடந்த ஜூலை 6-இல் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கும், ஜூலை 7-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,07,200-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, புதன்கிழமை காலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640-க்கும் விற்பனையானது. இதையடுத்து, மாலை விலை மீண்டும் குறைந்தது.அதன்படி, கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ. 1,06,000-க்கும் விற்பனையானது. இதனிடையே, தங்கத்தின் விலை இன்று(ஜூலை 9) காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,560-க்கும் கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,320-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.In Chennai, the price of ornamental gold, which had dropped during this morning's trading (July 9), suddenly rose in the evening.கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை