மனிதனாகவும் கடவுளாகவும்... மெஸ்ஸியைப் புகழ்ந்த முன்னாள் பிரான்ஸ் வீரர்!

Wait 5 sec.

ஆர்ஜென்டீன கால்பந்து வீரரும் 8 முறை பேலந்தோர் விருது வென்றவருமான லியோனல் மெஸ்ஸி குறித்து முன்னாள் பிரான்ஸ் வீரரும் வர்ணனையாளருமான தியரி ஹென்றி “அவர் மனிதனே அல்ல” எனக் கூறியுள்ளார். எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்துவார். தொடக்கத்தில் பெனால்டியில் கோல் அடிக்க தவறியதும் பின்னர் ஆட்ட நாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஃபோக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசும்போது முன்னாள் பிரான்ஸ் வீரரும் முன்னாள் பார்சிலோனா வீரருமான தியரி ஹென்றி கூறியிருப்பதாவது: முதலில் மெஸ்ஸி அழுவதைப் பாருங்கள். அது அவருக்கும் அந்த அணிக்கும் எவ்வளவு முக்கியமானது என்று புரியும். முதலில் அவர் மனிதன் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். ஏனெனில் அவர் பெனால்டியை தவற விடுகிறார். 8ல் 4 முறை பெனால்டியை தவறவிட்டிருக்கிறார். பிறகு சிறிது நேரத்திலே அவர் தான் மனிதனல்ல என்பதையும் நினைவூட்டுகிறார். நான் மெஸ்ஸியுடன் விளையாடி இருக்கிறேன். ஒரு முறை அவருடன் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது அவருக்குள் இருக்கும் சிங்கத்தை எழுப்பக்கூடாது என்று அறிந்தேன். சில நேரங்களில் பயிற்சி எப்படி நடக்குமென்பது உங்களுக்கேத் தெரியும். ஒருமுறை ஒரு பயிற்சியாளர் ஃபௌல் தராமல் ஆட்டத்தைத் தொடரும்படி கூறினார். அதனால் கோல் அடிக்கப்பட்டது. அப்போது மெஸ்ஸி அது ஃபௌல் அல்லது விசில் ஊதப்பட்டு மறுப்படியும் தொடங்கி இருக்க வேண்டுமெனக் கூறினார். அதற்கு பயிற்சியாளர், ’பந்து ஒன்றும் வெளியே போகவில்லை. குற்றம் சொல்வதை விடுத்து விளையாடு. அதெல்லாம் போட்டியில்தான் நடக்கும்’ என்றார். அடுத்த கணமே மெஸ்ஸியின் கண்களைப் பார்க்கும்போது அவர் உருமாறியிருந்தார்.பின்னர், பந்தை எடுத்த மெஸ்ஸி எங்களைத் தாண்டி தொடர்ச்சியாக மூன்று கோல்களை அடித்தார். நான் அங்கிருந்து இதெல்லாம் என் கண்களால் வேடிக்கைப் பார்க்கிறேன். அதன்பிறகு மெஸ்ஸி எங்கள் அனைவரிடமும் ’ஃபௌல் என்றால் ஃபௌல் எனக் கூறுங்கள்’ என்றார். நாங்களும் அடுத்த முறை அப்படியே சொல்கிறோம் என்றோம். ஏனெனில் அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது. அவர் அந்த மனநிலைக்குச் சென்றுவிட்டால் அவரைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினமானது என தியரி ஹென்றி கூறினார். எகிப்து - ஆர்ஜென்டீனா போட்டியில் பாகுபாடு? தெளிவான விதிகளுடன் பதிலளித்த ஃபிஃபா நடுவர் குழுத் தலைவர்!Lionel Messi Receives Huge Praise From France Great After FIFA World Cup 2026 Heroics: "Not a Human"