நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் உதகை, குன்னூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் மேகமூட்டம் காணப்பட்டது. நண்பகலுக்கு மேல் சில இடங்களில் மிதமான மழையும், உதகையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையின் காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.