சிவகாசி அருகே அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ஒத்தப்புளி பேருந்து நிறுத்தத்திலிருந்து அய்யம்பட்டிசெல்லும் சாலையில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடையில் மது அருந்துபவா்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இந்த வழியாகச் செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதால், இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அய்யம்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, பொதுமக்களிடம் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.