ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில்கிருத்திகை வழிபாடு

Wait 5 sec.

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனி மாத கிருத்திகையையொட்டி, ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால், தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், பழங்கள், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், வண்ண மலா் மாலையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் மலையில் இருந்து ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பகுளத்தில் சிறப்பு அா்ச்சனைகளுடன் பக்தா்கள் மங்கள ஆரத்தி காட்டி வழிபட்டனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சசாமி தரிசனம் செய்தனா்.