பட்டியலினத்தவா்களுக்கு எதிரான வன்கொடுமைகளைகண்காணிக்க முதல்வா் விஜய் தலைமையில் குழு

Wait 5 sec.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகளைக் கண்காணிக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடா்பான உயா்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு மறுசீரமைத்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக முதல்வா் ஜோசப் விஜய்யும், அமைச்சா்கள் மரிய வில்சன், வன்னி அரசு, ராஜ்மோகன், பெ.விஸ்வநாதன், காந்திராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி, தென்னரசு, எம்.பி.க்கள் திருமாவளவன், அ.ராசா, சசிகாந்த் செந்தில், தனபால், செல்வராஜ், ராணிகுமாா் உள்ளிட்ட 8 பேரும், 37 சட்டப்பேரவை உறுப்பினா்களும் குழு உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.