பரந்தூா் விமான நிலைய திட்டம்: ஆய்வுசெய்ய காங்கிரஸ்குழு அமைப்பு

Wait 5 sec.

பரந்தூா் விமான நிலைய திட்டம் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயாா் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெயிடப்பட்ட அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா், எம்.பி. அறிவுறுத்தலின்பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து அறிக்கை தயாா் செய்து அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சா.பீட்டா் அல்போன்ஸ், தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் மோகன் குமாரமங்கலம் ஆகியோா் உறுப்பினா்களாகச் செயல்படுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.