மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் சிக்மா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கவிருப்பதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜூலை 31ஆம் தேதி சிக்மா திரைப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளன.எனவே, சிக்மா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 18ஆம் நடைபெறலாம் என்று தெரிகிறது. இன்னும் இந்த தேதி உறுதி செய்யப்படாவிட்டாலும், தன்னுடைய திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தந்தை விஜய்யை ஜேசன் சஞ்சய் அழைக்க விருப்பதாகவும் கூறப்படுகிறது.அதே வேளையில், ஜேசன் சஞ்சய் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், நிச்சயம் ஆடியோ வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பார் என்றும், கருத்து வேறுபாடு காரணமாக விஜய் - சங்கீதா விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கும் போதிலும், பிள்ளைகளின் முக்கிய தருணங்களில் பெற்றோராக இருவரும் நிற்பார்கள், நிற்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா என்பது விரைவில் தெரிய வரலாம்.முன்னதாக, சிக்மா திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியானது. சிக்மா ஸ்டைல் பாடலில், ஜேசன் சஞ்சய்யும் நடனமாடியிருப்பது விஜய் ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய் ரசிகர்கள், விஜய்யின் கலை வாரிசாக ஜேசன் சஞ்சய்யை இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.பல்வேறு சம்பவங்களிலும், இதுபோல விவாகரத்து பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமான தருணங்களில் ஒன்றாக பங்கேற்பதைப் பார்த்திருக்கிறோம். இதுபோல முதல்வர் விஜய்யும் மகனின் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று தவெக தொண்டர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.திரைத்துறையில் அனுபவம் பெற்றவர் என்பதால், முதல்வர் விஜய்க்கும், தமிழ்த் திரைப்படம் ஒன்றை இயக்கி, இசை வெளியீட்டு விழா நடத்துவது என்பது எவ்வளவு முக்கியமான நிகழ்ச்சி என்பதை உணர்வுப்பூர்வமாகவும் அறிந்தே இருப்பார். தன்னுடைய மிக முக்கியமான தருணத்தில் தந்தை உடன் இருக்க வேண்டும் என்று மகன் ஜேசன் சஞ்சய்யும் விரும்பலாம். ஆனால், அது தாயின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்துவிடக் கூடாது என்றும் நினைக்கலாம். எனவே, முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? குடும்ப சச்சரவுகளை மறந்து விஜய் - சங்கீதா ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா என்பதே தவெக தொண்டர்களின் ஆசையான எதிர்பார்ப்பாக உள்ளது. Will Chief Minister Vijay attend the audio launch of Jason Sanjay's Sigma? Sangeetha's participation confirmed.