பண்ருட்டி அருகே டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் நிவாரணத் தொகையையும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த ஜூலை 5 அன்று காலை மருங்கூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை, பின்னால் தொடர்ந்து வந்த மினி லாரி பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகின. மினி லாரியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சத்யா (31). செல்வராணி (58), மற்றும் கீழுர் மதுரா, ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காந்திமதி (60), ரவிச்சந்திரன் (58) ஆகியோர் பலத்த காயமடைந்து பலியாகினர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.இவ்விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உக்கரவேல் (48), சந்தோஷ் (37), தேவகி (50), அஞ்சலை (60), சதீஷ் (35), விஜயா (35), சந்திரகுமார் (35) ஆகிய ஏழு நபர்களுக்கும் மற்றும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாவாசை (50) என்பவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்விபத்தில் பலியான நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ. 50,000-ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.பண்ருட்டி அருகே டிராக்டா் மீது சரக்கு வேன் மோதல்: பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்புChief Minister Vijay has expressed his condolences to the families of those who died in an accident where a mini-lorry collided with a tractor near Panruti, and also announced relief assistance on Tuesday (July 7).