நடிகர் பாரி இளவழகனின் அன்பே டயானா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். பாரி இளவழகனின் முதல் படமான ஜமாவில் அவரே நாயகனாக நடித்து இயக்கியும் இருந்தார்.அடுத்ததாக, தானே இயக்கி, நடித்த அன்பே டயானா திரைப்படமும் விரைவில் வெளியாகிறது. இதனை மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.நடிகை ரம்யா ரங்கநாதன் நாயகியாகவும் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. The trailer for actor Pari Ilavazhagan's film Anbe Diana has been released.