வியத்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Wait 5 sec.

வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 ஊழியர்களும் இருந்தனர். இன்று காலை 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர்.விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 -க்கும் அதிகமானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு என்பவர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், ”வியத்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் விபத்து தொடர்பாக அனைத்தி உதவிகளையும் வழங்கி வருகின்றனர். நமது அதிகாரிகளும் வியத்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.PM Modi has expressed condolences over the deaths of 15 Indians in a boat accident in Vietnam.