அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன்களை மாற்றிய ஜிம்பாப்வே!

Wait 5 sec.

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான கேப்டன்களில் மாற்றம் செய்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜிம்பாப்வே அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது.இந்த நிலையில், தேசிய அணிக்கான கேப்டன்களில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது.Zimbabwe announce leadership change across multiple formats https://t.co/LFzgJhjUcZ— ICC (@ICC) July 10, 2026அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிச்சர்ட் நிகராவா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் ரிச்சர் நிகராவா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனாக சிக்கந்தர் ராஸா தொடர்கிறார்.டெஸ்ட் போட்டிகளுக்கான ஜிம்பாப்வே அணியின் துணைக் கேப்டனாக பிரையன் பென்னட், ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் துணைக் கேப்டனாக சிக்கந்தர் ராஸா மற்றும் டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக ரிச்சர்ட் நிகராவா நியமிக்கப்பட்டுள்ளனர். Zimbabwe Cricket has announced changes to the captains across all formats of the game.ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும்: முன்னாள் வீரர்